சியபத பினான்ஸ் நிதி வைப்பு என்பது, உங்களால் கஷ்டப்பட்டு உழைக்கின்ற பணத்துக்கு நிலைத்த தன்மையையும், சேவையையும், நன்மைகளையும் உறுதிப்படுத்துகின்ற ஒரு பாதுகாப்பான சான்றாகும். அது உங்களதும் உங்களது கனவையும் அடைந்து கொள்ள, உங்கள் சிறகின் நிழலில் வீசும் தென்றலைப் போன்றது. ஏதேனும் அவசரங்களின்போது, உள்நாட்டு வெளிநாட்டுப் பயணங்களுக்கு, பிள்ளைகளது உயர் கல்விக்கு, உங்களுக்கான புதிய வீடு, சொத்துக்கள் அல்லது மாடி வீடுகளை கொள்வனவு செய்ய வேண்டிய தேவைகளின் போது சியபத பினான்ஸ் நிதி வைப்பின் ஊடாக உங்களது முதலீடுகளை மேற்கொண்டு அதன் மூலதனத்தின் மீது நன்மைகளைப் பெற்று உங்களது கனவை நனவாக்கிக் கொள்ள முடியும்.
சியபத பினான்ஸ் பீ எல் சீ கம்பனியானது, சம்பத் வங்கி பீ எல் சீ கம்பனியின் முழுமையான உரிமையைக் கொண்ட, அதன் ஊடாக நிருவகிக்கப்படுகின்ற ஒரு நிறுவனமாகும். 2011 ஆம் ஆண்டு 42 ஆம் இலக்க நிதி வியாபார சட்டத்தின் கீழ் இலங்கை மத்திய வங்கியின் நிதிச் சபை ஊடாக எமக்கு அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளதுடன், தேசிய நீண்ட கால ‘ஏ (எல் கே ஏ)’ தரப்படுத்தலின் கீழ், பிட்ச் ரேடிங்ஸ் நிறுவனத்தினால் வழங்கப்பட்டுள்ள உறுதிப்படுத்தலும் எம் கைவசம் உள்ளது. சிறப்பாக நிருவகிக்கப்படுகின்ற நிதி நிறுவனம் என்ற ரீதியில் எமது நிலைத்த தன்மை இதன் ஊடாக உறுதிப்படுத்தப்படுகின்றது.