முன்னிலை செய்தி

விவசாய இயந்திரமயமாக்கல் செயற்பாட்டிற்கு னுஐஆழு விவசாய-வணிகம் உடன் சியபத பினான்ஸ் பி.எல்.சி கைக்கோர்த்துள்ளது.

Siyapatha Finance PLC partners DIMO Agribusinesses for agriculture mechanization drive

சம்பத் வங்கி பி.எல்.சியின் முழு உரிமம் கொண்ட துணை நிறுவனமான சியபத பினான்ஸ் பி.எல்.சி, உள்ளூர் விவசாயத் துறையை மேம்படுத்தும் நோக்கத்துடன் னுஐஆழு விவசாய இயந்திரப் பாவனையாளர்களுக்கு பிரத்தியேகமான குத்தகை தீர்வுகளை வழங்குவதற்காக, அண்மையில், இலங்கையின் முன்னணி கூட்டு நிறுவனங்களில் ஒன்றான னுஐஆழு வின் விவசாயப் பிரிவான னுஐஆழு விவசாய-வணிகம் (னுஐஆழு யுபசiடிரளiநௌளநள) உடன்; ஓர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (ஆழரு) கையெழுத்திட்டது.

இலங்கைப் பொருளாதாரத்திற்கு விவசாயத் துறையின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொண்ட சியபத பினான்ஸ், விவசாய தொழில்முனைவோரின் வசதிக்காக இந்த வசதியை அதன் “விவசாய குத்தகைத் திட்டம்”(யுபசi டுநயளந Pசழபசயஅ) மூலம் ஆரம்பித்தது. இந்த ஒப்பந்தம் டிராக்டர்கள் மற்றும் ஒருங்கிணைந்த அறுவடை இயந்திரங்கள் உட்பட னுஐஆழு விவசாய இயந்திரங்களை கொள்வனவு செய்ய விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு குறைந்த வட்டி விகிதத்தில் பிரத்தியேக குத்தகைப் பொதிகளை வழங்குகிறது. சியபத பினான்ஸ் பி.எல்.சியின் “விவசாய குத்தகைத் திட்டம்”(யுபசi டுநயளந Pசழபசயஅ) குறைந்த தவணை கொடுப்பனவுகள், மாதாந்த அல்லது பருவகால அடிப்படையில் நெகிழ்வுத்தன்மைமிக்க மீள் செலுத்தும் வசதிகள் மற்றும் குறைந்தபட்ச ஆவணத் தேவைகளுடன் தொல்லையற்ற விரைவான ஒப்புதல்களை வழங்குகிறது. இக் குறைந்த தவணை கொடுப்பனவுகள் மற்றும் நெகிழ்வுத்தன்மைமிக்க மீள் செலுத்தும் வசதிகள் விவசாயிகளின் நிதித் திருப்பிச் செலுத்தும் சுமைகளைக் குறைக்கும் வகையில் செயல்படுத்தப்பட்டுள்ளன.

னுஐஆழு யுபசiடிரளiநௌளநள ஆனது சியபத பினான்ஸ் பி.எல்.சி வாடிக்கையாளர்களுக்கு பிரத்தியேகமாக பல நன்மைகளை வழங்க தயாராக உள்ளது, இலவச பதிவு, விவசாயிகளுக்கான இலவச கிட் மற்றும் மூன்று இலவச வாகன சேவைகளுடன் ஒயில் ஃபில்டர் உட்பட, மேலதிகமாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாதிரி சாதனங்களுக்கான இலவச புPளு உள்ளடங்கலாக எல்லைகளற்ற சிறப்பு தள்ளுபடிகள் இதில் உள்ளடங்கும். இந்தப் பிரத்தியேக நன்மைகள் நாட்டில் விவசாய இயந்திரமயமாக்கலை விரைவுபடுத்துவதற்கும் விவசாய இயந்திரங்களை எளிதாக அணுகவும் உதவிடும்.

புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பங்கேற்பாளர்கள் மத்தியில் உரையாற்றிய சியபத பினான்ஸ் பி.எல்.சியின் முகாமைத்துவப் பணிப்பாளர் திரு.ஆனந்த செனவிரத்ன, “எமது வாடிக்கையாளர்களுக்கு எப்பொழுதும் முன்னுரிமை வழங்கப்படுவதுடன், விவசாயத் தொழிற்துறைக்கு வசதியான நிதித் தீர்வுகளை மேம்படுத்துவதற்கு எங்களால் இயன்றளவு நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். நம் நாடு விவசாயத் துறையை பெரிதும் நம்பியுள்ளது, மேலும் பல விவசாயிகள் அவர்கள் செயல்பாட்டில் எதிர்கொள்ளும் பல சிரமங்கள் காரணமாக தங்கள் இயந்திரங்களை அணுகுவது, முதலீடு செய்வது மற்றும் மேம்படுத்துவது கடினமாக உள்ளது, ஏனெனில். னுஐஆழு விவசாய-வணிகம் உடன் கையெழுத்திட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம், விவசாயிகள் தங்கள் செயல்பாடுகளைத் தொடரவும் மேம்படுத்தவும் ஊக்குவிக்கிறோம். இது ஒரு சிறந்த மூலோபாய கூட்டாண்மை ஆகும், இது வாடிக்கையாளர்களுக்கு சிறந்த வாய்ப்புகள் மற்றும் தெரிவுகளை வழங்குகிறது. சியபத பினான்ஸ் பி.எல்.சியின் தனிப்பயனாக்கப்பட்ட குத்தகைத் திட்டங்களும், னுஐஆழு அக்றி பிஸ்னஸின் ( விவசாய நிதி) இணையற்ற நம்பகத்தன்மையும், வாடிக்கையாளர்களுக்கு வசதியான, தனிப்பயனாக்கப்பட்ட மற்றும் அனைத்தையும் உள்ளடக்கிய தீர்வை உறுதி செய்கிறது.” எனக் கூறினார்.

னுஐஆழு இன் தலைமைச் செயற்பாட்டு அதிகாரி திரு. ராஜீவ் பண்டிதகே கூறுகையில், “நாட்டிலுள்ள விவசாய சமூகத்தின் கனவுகள் மற்றும் அபிலாஷைகளுக்கு வலுவூட்டும் அதே வேளையில் உற்பத்தித்திறனை அதிகரிக்கும் நவீன தொழில்நுட்பத்துடன் உள்ளூர் விவசாயத் துறையைச் பலப்படுத்துவதற்கும் இவ்வாறான கூட்டாண்மை எங்களுக்கு உதவும். இலங்கையில் மஹிந்திரா டிராக்டர்கள் மற்றும் ஊடுயுயுளு அறுவடை இயந்திரங்கள் போன்ற உலகப் புகழ்பெற்ற விவசாய இயந்திரங்களின் வியாபாரக்குறிகளின் ஒரே விநியோகஸ்தர் என்ற வகையில், எங்கள் வாடிக்கையாளர்களுக்கு உகந்த அனுபவத்தை வழங்குதல் போன்ற சேவைகளுடன் எங்களின் பல்வகை சேவைகளை முழுமையாக்க விரும்புகின்றோம்.” எனக் குறிப்பிட்டார்.

சியபத பினான்ஸ் பி.எல்.சியின் இந்த குத்தகைத் திட்டத்தை விவசாயத் துறையில் உள்ளவர்களுக்கு மிகவும் நம்பிக்கைக்குரிய திட்டங்களில் ஒன்றாக மாற்றுவதற்கும், சியபத பினான்ஸ் பி.எல்.சி மற்றும் னுஐஆழு விவசாய-வணிகம (அக்றிபிஸ்னஸ்சஸ்) ஆகிய இரண்டின் பங்குதாரர்களுக்கும் பயனளிக்கும் வகையில்; பிரத்தியேக நன்மைகளை வழங்கும் என இப் பங்குடைமை உத்தரவாதம் அளிக்கின்றது. இத் தனித்துவமான பரஸ்பர நன்மை பயக்கும் பங்குடைமையினைக் குறிக்கும் முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தம் சியபத பினான்ஸ் பி.எல்.சியின் முகாமைத்துவ பணிப்பாளர் திரு. ஆனந்த செனவிரத்ன மற்றும் னுஐஆழு இன் முகாமைத்துவப் பணிப்பாளர் திரு. ராஜீவ் பண்டிதகே ஆகியோரால் இரு நிறுவனங்களின் சிரேஷ்ட முகாமையாளர் முன்னிலையில் கைச்சாத்திடப்பட்டது.