முன்னிலை செய்தி

சியபத பினான்ஸ் சுகாதாரத் துறைக்கு ஆதரவளிக்க நடவடிக்கை எடுத்துள்ளதோடு நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளுக்கு அத்தியாவசிய மருத்துவ உபகரணங்களை நன்கொடையாக வழங்க முன்வந்துள்ளது.

Siyapatha Finance takes steps to support the Health sector; donates essential medical equipment to hospitals across the country.

தொற்றுநோய் சமூகத்தை பெருமளவில் பாதித்து வரும் நிலையில், நாட்டின் முன்னணி நிதிச் சேவை வழங்குனர்களில் ஒன்றான சியபத பினான்ஸ் பி.எல்.சி, நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளுக்கு மருத்துவப் பராமரிப்பு உபகரணங்களை நன்கொடையாக வழங்குவதன் மூலம் மற்றுமொரு “சொற்ப உயிர் மூச்சு” திட்டத்தைத் தொடங்கி சமூகத்திற்கு தனது ஆதரவை வழங்க முன்வந்துள்ளது.

ஒரு வருடத்திற்கும் மேலாக காணப்படும் ஊழுஏஐனு 19 இற்க எதிரான போருக்கு மத்தியில், சுகாதாரத் துறையின் வளங்கள் அதன் வரம்புகளுக்கு அப்பால் தள்ளப்பட்டுள்ளன. சியபத பினான்ஸ், சுகாதார பராமரிப்பு நிறுவனங்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளின் அடிப்படையில் அவசரத் தேவைகளில் சிலவற்றை அடையாளம் காண முடிந்ததுடன் உடனடித் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக ஐஊரு படுக்கைகள் மற்றும் பிற அத்தியாவசிய மருத்துவ உபகரணங்களை வழங்குவதன் மூலம் அதன் ஆதரவை நல்கியது.

நாட்டின் பல பகுதிகளில் உள்ள மொத்தம் பதினொரு மருத்துவமனைகளுக்கு 10 ஐஊரு படுக்கைகள், பெட் பல்ஸ் ஆக்சிமீட்டர்கள் மற்றும் கருவி டிரோலிகளை நிறுவனம் தாராளமாக விநியோகித்துள்ளது. முறையே, மாவட்ட பொது வைத்தியசாலை -கம்பஹா, மாவட்ட பொது வைத்தியசாலை - கேகாலை, மாவட்ட பொது வைத்தியசாலை -மாத்தளை, மாவட்ட பொது வைத்தியசாலை -வவுனியா, மாவட்ட பொது வைத்தியசாலை - அவிசாவளை, பிரதேச வைத்தியசாலை - சாய்ந்தமருது, பிரதேச வைத்தியசாலை, அதரகல்ல - கல்கமுவ, பிரதேச வைத்தியசாலை, கட்டுகஹாஹேன, ஆதார வைத்தியசாலை - ஹோமாகம, பிரதேச வைத்தியசாலை, வாலான - வெலிகம, போதனா வைத்தியசாலை - அநுராதபுரம், சியபத பினான்ஸின் இந் ஊளுசு முயற்சியினால் பயனடைந்த வைத்தியசாலைகளாகும்.

நாட்டின் சுகாதாரத் துறைக்கான இந்த மதிப்புமிக்க பங்களிப்பு குறித்து சியபத பினான்ஸ் பி.எல்.சியின் முகாமைத்துவப் பணிப்பாளர் திரு. ஆனந்த செனவிரத்ன கருத்துத் தெரிவிக்கையில், “பொறுப்பான கூட்டு நிறுவனமாக, பிரதேசங்களைச் சென்றடைவதும் எமது ஆதரவை வழங்குவதும் எவ்வளவு முக்கியமானது என்பதை நாங்கள் புரிந்துக்கொண்டுள்ளோம். குறிப்பாக இந்த சவாலான காலங்களில் உதவி தேவைப்படும். சுகாதாரத் துறையானது அதன் வளங்களை அதன் வரம்புகளுக்கு அப்பால் தொடர்ச்சியாகப் பயன்படுத்துகிறது மற்றும் சமூகத்திற்கு சிறந்த சுகாதார வசதிகள் மற்றும் சேவைகளை வழங்குவதற்கு இந்த நிறுவனங்களை செயல்படுத்துவதற்கு அவர்களின் தேவைகளை நாங்கள் எளிதாக்குவது மிக முக்கியமானது. இந்த திட்டத்திற்கான நிதியுதவியளித்து மற்றும் அதனை பூர்த்தி செய்தலில் எங்கள் சொந்த ஊழியர்களின் நேரடி ஈடுபாட்டிற்கு நான்; நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன். முழு சியபத பினான்ஸ் குழுவும் ஒன்றிணைந்து இந்த திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றியது. எங்கள் பங்களிப்பின் மூலம் ஊழுஏஐனு 19 இற்கு எதிரான போராட்டத்திற்கு உதவுவதில் ஓர் நன்மைபயக்கும் விதத்திலான மாற்றம் ஏற்பட்டது என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்”எனக் கூறினார்.

இத் திட்டத்தின் அளவீடுகள், நாட்டின் சுகாதாரத் துறையின் உட்கட்டமைப்பை வலுப்படுத்துவதுடன், ஊழுஏஐனு 19 தொடர்பான அறிகுறிகள் மற்றும் பிற தீவிர நோய்களுடன் அனுமதிக்கப்படும் நோயாளிகள் பெறும் வசதிகள் மற்றும் தரத்தை மேம்படுத்துகிறது.