முன்னிலை செய்தி

பெருமைக்குரிய Infosys Transformation சிறப்பு விருதை சியபத பினான்ஸ் சுவீகரித்துள்ளது

Siyapatha Finance wins prestigious Infosys Finacle Transformation Excellence Award

உலகளாவிய ரீதியில் புகழ்பெற்ற Infosys Finacle புத்தாக்க விருதுகள் 2021 வழங்கும் நிகழ்வில் சியபத பினான்ஸ் பிஎல்சி, Transformation சிறப்பு விருதை தனதாக்கியிருந்தது. இதனூடாக நிறுவனத்தின் டிஜிட்டல் மாற்றியமைப்பு கட்டமைப்பின் சிறப்பு மற்றும் வலிமை போன்றவற்றை மேலும் உறுதி செய்துள்ளது. வங்கிசாரா நிதிச் சேவைகளை வழங்கும் துறையில் Finacle இன் கீழ் டிஜிட்டல் லீசிங் செயற்பாடுகளை ஆரம்பித்த முதலாவது நிறுவனமாக சியபத பினான்ஸ் திகழ்வதுடன், அதனூடாக வாடிக்கையாளர்களுக்கு மேம்படுத்திய வினைத்திறன் வாய்ந்த சேவைகளை துரிதமாக வழங்கக்கூடியதாகவுள்ளது.

சியபத பினான்ஸ் பிஎல்சியின் முகாமைத்துவ பணிப்பாளர் ஆனந்த செனெவிரட்ன கருத்துத் தெரிவிக்கையில், “Infosys Finacle போன்ற சர்வதேச கட்டமைப்பில் எமது முயற்சிகள் கௌரவிக்கப்பட்டுள்ளதையிட்டு நாம் மிகவும் மகிழ்ச்சியடைகின்றோம். நிறுவனத்தின் டிஜிட்டல் மயமாக்கல் நிகழ்ச்சி நிரலில் தொடர்ச்சியான வெற்றிகரமான செயற்பாட்டை இது பிரதிபலிப்பதுடன், எமது தகவல் தொழில்நுட்ப அப்ளிகேஷன்களை தொடர்ச்சியாக மேம்படுத்துவதில் எமது உறுதியான அர்ப்பணிப்பையும் பிரதிபலிக்கின்றது. வாடிக்கையாளர்களின் தேவைகளை நிவர்த்தி செய்வதில் புதிய தீர்வுகளை வழங்குவதை முன்னுரிமைப்படுத்துவதில் நிறுவனத்தின் டிஜிட்டல் தந்திரோபாயம் அமைந்துள்ளது. எமது வாடிக்கையாளர்களுக்கு அதிகளவு பயனளிக்கக்கூடிய வகையிலமைந்த தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதில் நாம் கவனம் செலுத்துவதுடன், புதிய டிஜிட்டல் லீசிங் செயற்பாட்டில் அதனை இணைத்து நடைமுறைப்படுத்தி, அதனூடாக எமது வாடிக்கையாளர்களுக்கு துரிதமாக சௌகரியங்களை பெற்றுக் கொள்ளக்கூடியமையை உறுதி செய்கின்றோம்.” என்றார்.

வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் டிஜிட்டல் சேவைகளை மேம்படுத்தும் வகையிலமைந்த தீர்வுகளை பின்பற்றுவதில் கவனம் செலுத்தும் நிறுவனம் எனும் வகையில், சியபத பினான்ஸ் நிறுவனத்தினால் தொடர்ச்சியாக புத்தாக்கம் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு, நவீன தொழில்நுட்பங்களினூடாக பயன்படுத்த இலகுவான தீர்வுகளை அறிமுகம் செய்வதில் கவனம் செலுத்தப்படுகின்றது. Infosys Finacle இனால் கட்டமைக்கப்பட்ட பிரதான வங்கியியல் கட்டமைப்பில் இயங்கும் நிறுவனத்தினால், வாடிக்கையாளர்களுக்கு மேம்படுத்தப்பட்ட நிதிச் சேவைகளை வழங்கக்கூடிய சிறந்த நிலை காணப்படும்.

தகவல் தொழில்நுட்ப பிரிவின் தலைமை அதிகாரி மஞ்சுள பாலசூரிய கருத்துத் தெரிவிக்கையில், “தனது டிஜிட்டல் லீசிங் கட்டமைப்புக்காக Infosys Finacle Client புத்தாக்க விருதுகள் 2021 க்காக கௌரவிக்கப்பட்டுள்ளதையிட்டு சியபத பினான்ஸ் பிஎல்சி பெருமை கொள்கின்றது. சம்பத் வங்கியின் துணை நிறுவனம் எனும் வகையில், எமது சகல தகவல் தொழில்நுட்ப செயற்பாடுகளுக்கும் பொருத்தமான வகையிலமைந்த தொழில்நுட்ப சார் புத்தாக்கங்களை அறிமுகம் செய்வதற்கு சகல நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளோம். அதனூடாக, இலங்கையில் நிதிசார் உள்ளடக்கம் ஏற்படுத்தப்படுவதை துரிதப்படுத்துவதற்காக புத்தாக்கமான தயாரிப்புகள் மற்றும் சேவைகளை மேற்கொள்வதில் கவனம் செலுத்துகின்றோம். Infosys உடனான எமது பங்காண்மை என்பது நிதித்தொழில்நுட்ப சேவைகளுக்கான முழுமையான தன்னியக்கமயமாக்கலுடன் அமைந்த தீர்வுகளில் கவனம் செலுத்துவதற்கு முடிந்திருந்தது.” என்றார்.

Infosys இன் முழு உரிமையாண்மையின் கீழ் இயங்கும் EdgeVerve Systems இடமிருந்து வழங்கப்படும் துறையின் முன்னோடியான டிஜிட்டல் வங்கியியல் தீர்வாக Finacle அமைந்துள்ளது. Finacle இனால் பாரம்பரிய மற்றும் வளர்ந்து வரும் நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனங்களுக்கு உண்மையான டிஜிட்டல் மாற்றியமைப்பு சேவைகளை முன்னெடுத்துச் செல்ல வழிகோலப்படுவதுடன், பாரியளவு கட்டமைப்பு செயற்பாடு, உள்ளார்ந்த தரவுகளின் அடிப்படையிலான தொடர்புகள் மற்றும் ஒப்பற்ற தன்னியக்கமயமாக்கல்கள் போன்றவற்றையும் பேண முடிகின்றது. Infosys Finacle Client புத்தாக்க விருதுகள் வழங்கும் நிகழ்வு வருடாந்தம் ஏற்பாடு செய்யப்படுவதுடன், இந்த ஆண்டுக்கான விருதுகளுக்காக 250 க்கும் அதிகமான விண்ணப்பங்கள் பத்து பிரிவுகளில் கிடைத்திருந்தன.

விருதுகள் வழங்கும் நிகழ்வுக்காக பிரேரிக்கப்பட்ட புத்தாக்கங்கள் தொடர்பில் Infosys இன் பிரதம வியாபார அதிகாரியும் சர்வதேச தலைமை அதிகாரியுமான சனட் ரவோ கருத்துத் தெரிவிக்கையில், “எதிர்பாராத மாற்றங்களுக்கு முகங்கொடுக்கும் காலப்பகுதியில் நாம் வாழ்ந்து வருகின்றோம். ஒப்பற்ற வாடிக்கையாளர் மையப்படுத்திய புத்தாக்கத்தினூடாக போட்டிகரமானதாகவும் பொருத்தமானதாகவும் திகழக்கூடியதாகவுள்ளது. கொவிட்-19 தொற்றுப் பரவல் காரணமாக, இந்த நிலைமை மேலும் துரிதப்படுத்தப்பட்டு, வங்கிகளுக்கும் நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனங்களுக்கும் புத்தாக்கமான வியாபார மாதிரிகளை முன்னெடுப்பதற்கு தூண்டியுள்ளதுடன், வாடிக்கையாளர்களை மையப்படுத்திய பெறுமதிக் கட்டமைப்புகள் மற்றும் டிஜிட்டல் யுகத்துக்கு நிறுவனங்களை நகர்த்தவும் ஏதுவாக அமைந்துள்ளது. Infosys Finacle புத்தாக்க விருதுகள் 2021 இன் பிரேரிக்கப்பட்டவர்கள் மற்றும் வெற்றியாளர்கள் தமது முயற்சிகளை தெளிவாக வெளிப்படுத்தியிருந்ததுடன், உலகின் மிகவும் தாக்கம் நிறைந்த தொழில்நுட்ப ரீதியான வங்கியியல் மற்றும் நிதியியல் புத்தாக்கங்களை உருவாக்கியிருந்தனர். இந்த ஆண்டின் அளவீடுகள் மற்றும் பரந்தளவு பிரேரிப்புகள் போன்றன நிலைபேறான முதலீடுகளை காண்பிப்பதுடன், உலகளாவிய ரீதியில் வங்கிகளின் புத்தாக்கங்களில் கவனம் செலுத்தவும் ஏதுவாக அமைந்துள்ளது. சகல வங்கிகள் மற்றும் நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்வதுடன், 2022ஆம் ஆண்டிலும், அதனைத் தொடர்ந்தும் வெற்றிகரமாக இயங்க வாழ்த்துகின்றேன்.” என்றார். சம்பத் வங்கி பிஎல்சியின் முழு உரிமையாண்மையின் கீழ் இயங்கும் துணை நிறுவனமாக சியபத பினான்ஸ் பிஎல்சி திகழ்கின்றது. நாட்டின் வங்கிசாரா நிதிச் சேவைகளை வழங்கும் துறையில் 15 வருடங்களுக்கு மேலான அனுபவத்தைக் கொண்டுள்ளது. நாட்டின் வங்கிசாரா நிதிச் சேவைகளை வழங்கும் துறையில் பிரதான செயற்பாட்டாளராக திகழ்வதுடன், வங்கியினால் வழங்கப்படும் நிதிச் சேவைகளில் லீசிங், பிரத்தியேகக் கடன்கள், வியாபாரக் கடன்கள், தங்க அடகுச் சேவை, நிலையான வைப்புகள், சேமிப்புகள் மற்றும் ஃபக்டரிங் (கடன் நிதியளிப்பு) போன்றன அடங்கியுள்ளன. படிப்படியாக வளர்ச்சியடைந்துள்ள சியபத பினான்ஸ், இலங்கையின் மிகவும் நம்பகமான நிதிச் சேவைகளை வழங்கும், பிரதான நகரங்களில் 40 க்கும் அதிகமான கிளைகளை கொண்டுள்ள ஓர் நிறுவனமாக வளர்ந்துள்ளது.